விக்கிமீடியா சிறப்பம்சங்கள், ஏப்ரல் 2012

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Highlights, April 2012 and the translation is 100% complete.

ஏப்ரல் 2012க்கான விக்கிமீடியா அறக்கட்டளை அறிக்கை மற்றும் விக்கிமீடியா பொறியியல் அறிக்கை, விக்கிமீடியா இயக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த மற்ற முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து சிறப்பம்சங்கள்

விக்கிமீடியா அறக்கட்டளையின் சிறப்பம்சங்கள்

நிதி திரட்டுதல் மற்றும் தொடர்பு மாதிரிகள் விரிவாக்கம்

பெர்லினில் நடந்த கூட்டத்தில் விக்கிமீடியா பொறுப்பாளர் குழுஎடுத்த தீர்மானங்களுக்கு பிறகு, விக்கிமீடியா திட்டத் தளங்களில் திரட்டப்பட்ட பணத்தை வழங்க ஒரு புது மாதிரியை செயல்படுத்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. அடிப்படை செயல்பாடுகளுக்கான பணம் மற்றும் WMFன் செயல்பாட்டு இருப்பு தவிர, அனைத்தும்(அத்தியாயங்களுக்கான நிதி மற்றும் WMFன் அடிப்படை அல்லாத (Non-core) செயல்பாடுகளுக்கும் நிதியையும் சேர்த்து) புதிய தன்னார்வலர்களைக் கொண்ட நிதி பரவல் குழுவின் (FDC) பரிந்துரைகளுக்கேற்ப. வழங்கப்படும். குழுவின் மற்றொரு தீர்மானம், விக்கிமீடியா இயக்கத்துடன்: "இயக்க பங்குதாரர்கள்" (like-minded organizations that actively support the movement's work), "தேசிய அல்லது துணை தேசிய அத்தியாயங்கள்" (which includes the existing chapter model), "கருப்பொருள் நிறுவனங்கள்" (non-profits representing the movement and using the Wikimedia trademarks, which are supporting work focused on a specific topic), and "பயனர் குழுக்கள்" (open membership groups which may or may not choose to incorporate), புதிய தொடர்பு மாதிரிகளை அங்கீகரிக்கிறது.

இந்திய மொழிகளுக்கான பரப்புரை

தலைமை உலகளாவிய மேம்பாட்டு அதிகாரி பார்ரி நியூஸ்டேட் இந்தியாவிற்கு சென்று, பெங்களூருவில் உள்ள விக்கிமீடியர்களைச் சந்தித்துள்ளார், மேலும் இந்திய மொழித் திட்டங்களை ஆதரிக்க விக்கிசங்கமோத்சவம் எனும் மலையாள விக்கி சமூகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்தியக் குழுவானது ஏழு இந்திய மொழி சமுதாயங்களுடனும் பரப்புரை, சமூக ஊடக உத்தி மற்றும் சமூக உத்வேகத்தை உருவாக்க முயற்சிகள் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. .

விக்கிப்பிடியா கைப்பேசி தளத்திற்கான பக்க பார்வையிட்டவர்கள் (சிவப்பு: ஆங்கிலமில்லாத பதிப்புகள்) ஆண்டுத் திட்டத்தின் 2 பில்லியன் இலக்குடனான ஒப்பீடு

கைப்பேசி பக்க பார்வையிடல் இலக்கு எட்டப்பட்டது

ஏப்ரல் இறுதியில், விக்கிப்பீடியா கைப்பேசித் தளம் 2 பில்லியன் மாத பக்க பார்வைகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

துரிதமான மென்பொருள் நிறுவுதல் சுழற்சியை நோக்கி

விக்கிமீடியா பொறியாளர்கள் மிக அதிக நிறுவுதல் சுழற்சிக்கு (rapid deployment cycle) மாற ஆரம்பித்துள்ளனர், மேலும் மீடியாவிக்கி மென்பொருளின் மிக அண்மைய பதிப்பை விக்கிப்பீடியா மற்றும் மற்ற விக்கிமீடியா தளங்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை நிறுவ ஆரம்பித்துள்ளனர்.

தரவு மற்றும் போக்குகள்

மார்ச் மாதத்திற்கான உலகளாவிய தனிப்பட்ட பார்வையாளர்கள்:

489 மில்லியன் (பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது +2.7% ; முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது +22.3%)
(அனைத்து விக்கிமீடியா அறக்கட்டளை திட்டங்களுக்கும் comScore தரவு; comScore ஏப்ரல் மாத தரவை பிறகு மே மாதத்தில் வெளியிடும்)

ஏப்ரல் மாதத்திற்கான பக்க கோரிக்கைகள் :

17.3 பில்லியன் ( மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது+0.4% ; முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது +18.2% )
(சேவையக பதிகை தரவு, கைப்பேசி அணுகலையும் சேர்த்து அனைத்து விக்கிமீடியா அறக்கட்டளை திட்டங்கள் )

மார்ச் 2012 க்கான செயலிலுள்ள பதிவு செய்த தொகுப்பாளர்கள் (>= 5 தொகுப்புகள்/மாதம்):

85.09K (பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது +0.2% / முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது -4.5% )
(தரவுத்தள தரவு, விக்கிமீடியா காமன்ஸ் தவிர அனைத்து விக்கிமீடியா அறக்கட்டளை திட்டங்கள்)

மார்ச் 2012க்கான அறிக்கை அட்டை : http://reportcard.wmflabs.org/

நிதி நிர்வாகம்

(இந்த அறிக்கை நேரப்படி நிதி தகவல்கள் மார்ச் 2012 வரை மட்டுமே கிடைக்கப்பெறும்.)

அனைத்து நிதி தகவல்களும் ஜூலை 1, 2011 - மார்ச் 31, 2012 க்கு இடைப்பட்ட காலத்திற்குட்பட்டது. .

வருமானம் $ 32,054,861
செலவுகள்:
 தொழில்நுட்பக் குழு $ 7,788,192
 சமூக/நிதிதிரட்டுதல் குழு $ 3,212,763
 உலகளவிய மேம்பாட்டுக் குழு $ 2,984,100
 நிர்வாக (Governance) குழு $ 718,116
 நிதி/சட்ட/மனிதவள/நிர்வாகக் குழு $ 4,607,656
மொத்த செலவுகள் $ 19,310,826
மொத்த உபரி / (இழப்பு) $ 12,744,035
  • இந்த மாதத்திற்கான வருமானம் $ 1.9MM, திட்டப்படி வருமானம் $ 3.9MM, தோராயமாக $ 2MM அல்லது 53% திட்ட நிலையிலேயே உள்ளது.
  • வருட ஆரம்பத்திலிருந்து (Year-to-date) இன்றைய தேதிவரை $ 32.1MM, திட்டப்படி $ 28.6MM, தோராயமாக $ 3.5MM அல்லது 12% திட்டத்தை விட மேல் உள்ளது.

இந்த மாதத்திற்கான செலவுகள் $ 2.3MM, திட்டப்படி செலவுகள் $ 2.2MM, தோராயமாக $ 112K அல்லது 5% திட்டமிட்டதை விட அதிகமாக செலவாகியுள்ளது.

  • வருட ஆரம்பத்திலிருந்து (Year-to-date) இன்றைய தேதிவரை $ 19.3MM vs திட்டப்படி $ 21.1MM, தோராயமாக $ 1.8MM அல்லது 8% திட்டத்தை விட குறைவானது.
  • மார்ச் 31, 2012 வரையிலான நிதி நிலை $ 30.6MM - தோராயமாக 13 மாத செலவுகள்.
மாதந்திர விக்கிமீடியா அறக்கட்டளையின் metrics மற்றும் செயல்பாடுகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான (மே 3, 2012) கூட்டத்தின் ஒளிப்படம்.

பிற இயக்கத்தின் சிறப்பம்சங்கள்

நிறுவனத்திலிருந்து பணியாற்றும் விக்கிப்பீடியர்கள் "Wikipedian in Residence" மாதிரி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிறது

பிரித்தானிய நூலக பணியாளர்கள் மற்றும் விக்கிமீடியா சமூகம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட தொடர்புக்கு ஆதரவளிக்க, பிரித்தானிய நூலகம் தற்போது நிறுவனத்திலிருந்து பணியாற்றும் விக்கிப்பீடியர்களை (Wikipedian in Residence) அறிவிப்பதில் (விக்கிமீடியா UKவுடன் இணைந்து) புதிய காலச்சார நிறுவனமாக இணைந்துள்ளது. பெருமை வாய்ந்த அமெரிக்க அருங்காட்சியகங்கள் சங்கத்தின் மாநாடு 2012ல், உலகம் முழுவதுமிருந்து ஐந்து, நிறுவனத்திலிருந்து பணியாற்றும் விக்கிப்பீடியர்கள் (Wikipedians in Residence) இந்த கூட்டு முயற்சி மாதிரியை முன்வைத்துள்ளனர். "This Month in GLAM" செய்தியேட்டின் ஏப்ரல் வெளியீட்டில் இஸ்ரேல், ஜெர்மனி, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் நிறுவனத்திலிருந்து பணியாற்றும் விக்கிப்பீடியர்களின் (Wikipedian in Residence) பதவிகள் அறிக்கையிடப்பட்டுள்ளது.

விக்கிதரவின் முதன் முதலான திரைக்காட்சி

விக்கிதரவு விக்கியிடை இணைப்புகளில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது

இதன் முதல் மாதத்தில், விக்கிதரவு குழு திட்டத்தின் முதல் கட்ட குறியாக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இது விக்கியிடை இணைப்புகளை மையமாக சேமிக்க அனுமதிக்கும். விக்கிதரவின் அடிப்படையாக இரண்டு மீடியாவிக்கி நீட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன: Wikibase Client மற்றும்Wikibase core. சோதனை பதிப்பு விரைவில் கிடைக்கும்.

மொன்மௌத்பீடியா (Monmouthpedia) திட்டத்தில் இருந்து பன்மொழிப் போட்டி

Monmouthpedia பகுதியாக - "நகரம் முழுவதையும் உள்ளடக்கும் முதல் விக்கிப்பீடியா திட்டம்" - மொன்மௌத் பற்றி எழுதிய அல்லது மேம்படுத்திய அல்லது பதிவேற்றிய விக்கிமீடியர்களுக்கு சார்லஸ் ரோல்ஸ் சாலஞ் பரிசு வழங்கினார்.மேலும், இந்நகரத்தில் ஏப்ரலில் முதல் சந்திப்பு நடந்தது.

தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பரிசு பெற்ற இரண்டு படங்களில் ஒன்று: தமிழ்நாடு, இந்தியாவில் ரேக்ளா பந்தயம்

தமிழ் ஊடகப் போட்டி

தமிழ் விக்கிமீடியா சமூகம் வெற்றிகரமாக "தமிழ் விக்கி ஊடகப் போட்டியை " நடத்தி முடித்துள்ளது, இதன் மூலம் 15,000 ஊடகங்களை 307 பேர் பங்களித்துள்ளனர்.

தரவுத்தள நிறுவனம் இலவச அணுகலை விக்கிமீடியர்களுக்கு வழங்கியுள்ளது

விக்கிப்பீடியா மற்றும் அதன் சகோதரத் திட்டங்களில் பங்களிப்பாளர்களின் வேலைக்கு ஆதரவு வழங்க ஹைபீம் ஆராய்ச்சி தரவுத்தளம் 600 விக்கிமீடியர்களுக்கு மேல் இலவச அணுகலை வழங்கியுள்ளது. தொடர் பங்களிப்பாளர்கள் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.