Jump to content

கேரள விக்கிமீடியர்கள்/பற்றி

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedians of Kerala/About and the translation is 95% complete.
Outdated translations are marked like this.
Wikimedians of Kerala

எங்களைப் பற்றி

கேரள விக்கிமீடியர்கள் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களில் பணிபுரியும் விக்கிமீடியர்களின் ஒரு குழு ஆகும். எங்கள் தலையாய கவனம் மலையாளம் மொழியில் வேலை செய்யும் மக்களை ஆதரிப்பதாகும். கேரளத்தில் பேசப்படும் மற்ற மொழிகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம். இந்த குழு மலையாள மொழி மற்றும் விக்கிமீடியா திட்டங்களை ஊக்குவிக்க மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றது. இத்தகைய செயல்பாடுகளில் ஆர்வமுள்ள எவருக்கும் இந்த குழுவுடன் இணையலாம்.

பயனர் குழு கேரளாவில் செய்யப்படும் வேலைகளில் முதன்மையான கவனம் செலுத்துகின்றது. இருப்பினும், உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்காக நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றோம். பல்வேறு விக்கிமீடியா திட்டங்களில் மலையாள மொழி உள்ளடக்கங்களை நாங்கள் ஊக்குவித்து வருகின்றோம். கேரளாவில் விக்கிமீடியா திட்டங்களில் பயனர் எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு நடத்தி வருகின்றோம்.

நோக்கங்கள்

  • விக்கிமீடியா இயக்கத்தின் யோசனைகளை பரப்புதல்
  • கேரளத்தவர்களுக்கும் வெளிநாட்டில் வாழும் கேரளத்தவர்களுக்கும் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்துவது
  • விக்கிமீடியா திட்டங்களுக்கு பங்களிக்க பன்களிப்பாளர்களை ஊக்குவிப்பது
  • சமூகத்தை பராமரிப்பதோடு சமூகத்தில் மேலும் உறுப்பினர்களை பெறுதல்
  • பிற சமூகங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் உதவுதல்.
  • பிற மலையாள அடிப்படையிலான விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுதல்.
  • கேரள மாநிலம் மற்றும் அது தொடர்பான தலைப்புகள் பற்றிய உள்ளடக்கத்தை ஆங்கிலத்திலும் மற்ற அனைத்து மொழிகளிலும் மேம்படுத்தவும்.

செயல்பாடுகளுக்கான திட்டங்கள்

  • விக்கிமீடியா இயக்கத்தில் புதிய பயனர்களை ஈர்ப்பதற்காக பட்டறைகள் மற்றும் சந்திப்புகளை நடத்துதல்.
  • விக்கிமீடியா திட்டங்கள் மற்றும் பொதுவாக இலவச உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்.
  • கல்வியில் விக்கிமீடியா வளங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும்.
  • பொதுவான படைப்புகளுக்கான உள்ளடக்கத்தை பெறுவதற்கான நிகழ்வுகளை அமைத்தல், மற்றும் அவற்றை விக்கிமீடியா பொதுவகத்துக்கு பதிவேற்றம் செய்தல்
  • பல்வேறு விக்கிமீடியா திட்டங்களில் மலையாள மொழி மற்றும் கேரளா தொடர்பான இணையதளங்களை உருவாக்கி பராமரித்தல்
  • புதிய உள்ளூர் விக்கிகளை உருவாக்குதல் (விக்கிப்பீடியா, விக்ஷனரி, விக்கிபுக்ஸ் போன்றவை)