Movement Strategy/Recommendations/Summary/ta

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Movement Strategy/Recommendations/Summary and the translation is 89% complete.
விக்கிமீடியா 2030 இயக்கவியூகத்தின் நிர்வாகச் சுருக்கம்

இயக்கம் குறித்த வியூகம் மக்களை மையமாகக் கொண்டிருக்கிறது. அறிவை பகிரும் மற்றும் நுகரும் மக்கள், மற்றும் நமது இயக்கத்திற்கு சக்தி அளிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களை உருவாக்கும் மக்கள். 2017 -ஆம் ஆண்டில், நமது இயக்கத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பயணத்தை நாம் மேற்கொண்டோம். 2030 -க்குள் இலவச அறிவுச் சூழலின் அத்தியாவசிய உள்கட்டமைப்பாக நாம் மாறிட, நாம் ஒரு பேரார்வமுடன் கூடிய வியூகத்தின் திசையை அமைத்துக் கொண்டோம். நமது பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் எவரும் எங்களுடன் சேர முடியும் என்பதை உறுதிப்படுத்த, அறிவுச் சொத்தை உருவாக்கவும் அறிவை ஒரு சேவையாக மாற்றவும் பாடுபடுகிறோம்.

இரண்டு வருட காலத்தில், வியூகத்தின் திசையை நோக்கி செல்ல எங்களுக்கு உதவும் வகையில் நமது கட்டமைப்புகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி விவாதிக்க, இயக்கம் முழுவதிலும் உள்ளவர்கள் புரட்சிகரமான வெளிப்படையான மற்றும் பங்கேற்புடன் கூடிய வியூகம் உருவாக்கச் செயல்பாட்டில் ஒத்துழைத்தனர். இந்த ஆவணம் இந்த கூட்டு முயற்சியின் முடிவுகளை முன்வைக்கிறது: மாற்றத்திற்கான வழிகாட்டியை கோடிட்டுக் காட்டும் 10 பரிந்துரைகள் மற்றும் அடிப்படைக் கொள்கைகள். சில யோசனைகள் தற்போதுள்ள வெற்றிகளையும், நமது இயக்கத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள வியக்கத்தக்க நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. நாம் செயல்படும் விதத்தில், ஊடாடும் விதத்தில், மற்றும் நமது நோக்கம் மற்றும் மதிப்புகளை பரிந்துரைக்கும் விதத்தில் மாற்றங்கள் தேவை என்று சிலர் கூறுகின்றனர். நமது இயக்கத்தின் வெற்றி தொடர்வதற்காக, நாம் செயல்படும் விதத்தில் ஒத்துழைக்கும் விதத்தில், நிர்வகிக்கும் விதத்தைல் புதிய வழிகளை நாம் கண்டறியவேண்டும் என்று சிலர் அறிவுறுத்துகின்றனர்.

தன்னார்வலர்கள், ஊழியர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையின் குழு உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள 100 -க்கும் மேற்பட்ட விக்கிமீடியன்களால் இந்த பெரும் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒன்பது அம்சங்களில் பணிக்குழுக்களை அமைத்தனர், ஒவ்வொரு குழுவும் ஆன்லைனிலும் நேரில் சந்திப்புகளை நிகழ்த்தி, இந்த அம்சங்கள் மீது ஆராய்ச்சி செய்தார்கள், கலந்துரையாடினார்கள் மற்றும் புது யோசனைகளை உருவாக்கினார்கள். இன்னும் பல நபர்கள் பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர், விவாதங்களை மேம்படுத்தினர், மற்றும் வர்ச்சுவலாகவும் நேரடியாகவும் பல நிகழ்வுகளில் பங்களித்தனர். தற்போதைய பரிந்துரைகள் ஆகஸ்ட் 2019 -இல் தொடங்கி நான்கு முக்கிய சுழற்சிகளின் இறுதிவிளைவு ஆகும். பின்னூட்டம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில், பணிக்குழுக்கள் செப்டம்பர் மாதத்தில் 89 பரிந்துரைகளை உள்ளடக்கிய இரண்டாவது பதிப்பைத் தயாரித்தனர். இவை தனிப்பட்ட எழுத்தாளர்களால் 13 பரிந்துரைகள் கொண்ட தொகுப்பாக ஒருங்கிணைக்கப்பட்டன. 2020 ஜனவரி முதல் மார்ச் வரை பெறப்பட்ட பின்னூட்டங்கள் பரிந்துரைகளைச் செம்மைப்படுத்தவும் தற்போதைய இறுதிநிலைக்கு கொண்டுவரவும் உதவின: பத்து பரிந்துரைகள் மற்றும் பத்து கோட்பாடுகள்.

Principles

இந்த கோட்பாடுகள் இயக்கம் முழுவதும் உள்ள அடிப்படை மதிப்புகள் ஆகும், அவற்றின் அடிப்படையில் பரிந்துரைகள் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்த கோட்பாடுகள்: மக்களை மையமாகக் கொண்டவை; பாதுகாப்பு; முடிவெடுப்பதில் அனைவரின் கருத்துக்களையும் கருத்தில் கொள்தல்; சமபங்கு மற்றும் அதிகாரம் அளித்தல்; அதிகாரத்தை பரவலாக்குதல் மற்றும் சுய மேலாண்மை; சூழலைக் கருத்தில் கொள்தல்; கூட்டாக பணியாற்றுதல் மற்றும் ஒத்துழைப்பு; வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல்; செயல்திறன்; மற்றும் விடாமுயற்சி. இந்த ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கோட்பாடுகள், நமது இயக்கம் இலவச அறிவுச் சுற்றுச்சூழல் அமைப்பின் அத்தியாவசிய உள்கட்டமைப்பாக மாறுவதற்கு என்ன தேவை என்பதைப் பற்றிப் பேசுகிறது.

Recommendations

இந்த கோட்பாடுகளை மனதில் கொண்டு, இயக்கத்தின் வியூகத்தின் 10 பரிந்துரைகள் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் மாற்றங்களை முன்வைக்கின்றன:

  • நமது இயக்கத்தின் நிலைத்தன்மையை அதிகரித்தல் என்பது மக்களை மையமாகக் கொண்டு மக்களின் தேவைகளில் முதலீடு செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தின் நிலைத்தன்மை நமது பங்களிப்பாளர்களின் - நிலைநாட்டப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் புதியவர்கள் - மற்றும் நமது செயல்பாடுகளின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஆதரிப்பதைப் பொறுத்து இருக்கிறது. இந்த பரிந்துரை நிதிநிலைமை மற்றும் வருவாயை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகளை விநியோகிப்பதற்கான சமத்துவமான வழிகளையும், இயக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தலையும், உள்ளூரில் நிதி திரட்டும் திறனை வளர்ப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கூட்டு முயற்சிகளை வளர்ப்பது குறித்தும் ஆராய்கிறது.

  • பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் என்பது நமது தயாரிப்புகளின் பயன்பாட்டினை மற்றும் அணுகல்தன்மையை மற்றும் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வழிகளையும் குறிக்கிறது. மாறுபட்ட சுயவிவரங்கள் மற்றும் சாதனங்களுக்கான ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் சோதனைகளில் பங்களிப்பாளர்கள் மற்றும் டெவலப்பர் சமூகங்களை ஈடுபடுத்துமாறு இது பரிந்துரைக்கிறது. புதியவர்களுக்கான ஆதாரங்கள், ஆவணப்படுத்தல் தரநிலைகள், திட்டங்களுக்கு இடையே மற்றும் மொழிகளுக்கு இடையே செயல்புரியும் கருவிகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் ஏபிஐ மேம்பாடு ஆகியவை கூட இவற்றில் அடங்கும்.

  • நடத்தை நெறிமுறைகளை உருவாக்குதல், சம்பவங்களை அநாமதேயமாக தெரிவித்தல் மற்றும் நமது திட்டங்களில் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை பாதுகாப்பு மற்றும் சேர்த்தலை வழங்கவும் என்பதில் விவாதிக்கப்படுகின்றன. பங்களிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த பரிந்துரை இயக்கத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தைக்கான ஒரு அடிப்படையை முன்மொழிகிறது, இதில் விரைவாக பதில்வினை ஆற்றும் உள்கட்டமைப்பை உள்ளடக்கிய பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் செயல்படுத்தல் திட்டம், பாதுகாப்பிற்கான உள்ளூர் திறனை வளர்த்துக் கொள்தல், இலவச அறிவு இயக்கத்திற்கு சாதகமான சட்ட கட்டமைப்பிற்கான பரிந்துரை மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தனியுரிமை கருவிகள் ஆகியவை அடங்கும்.

  • முடிவெடுப்பதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தல் என்பது இயக்கத்தில் பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பொறுப்பேற்றலை நிறுவுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகளுடன் முடிவெடுப்பதில் சமமான பிரதிநிதித்துவம், உள்ளூர் சமூகங்களின் அதிகாரம் மற்றும் பங்கேற்புடன் கூடிய வள ஒதுக்கீடு ஆகியவை இந்த பரிந்துரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இது இயக்கத்திற்கான சாசனத்தை பரிந்திரைக்கிறது, அதாவது உலகளாவிய கவுன்சில், பிராந்திய மற்றும் அம்சங்களுக்கான மையங்களை நிறுவுதல் மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கிறது.

  • தெளிவாக வரையறுக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை மேலும் மேம்படுத்தி, இயக்கத்தினுள்ளும் மற்றும் பங்குதாரர்கள், தொழில்நுட்ப பங்களிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான டெவலப்பர் சமூகங்களுடனும் மேம்பட்ட தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கவதற்கு பங்குதாரர்களை ஒருங்கிணைக்கவும் பரிந்துரைக்கிறது. வளங்களை ஒருங்கிணைத்தல், புதிய செயல்பாடுகள், விரிவான தகவல் பரிமாற்றம், மேம்பட்ட கற்றல் மற்றும் அறிவு பரிமாற்றம் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுக்காக ஒரு தொழில்நுட்ப கவுன்சிலை ஏற்படுத்துமாறும் இது பரிந்துரைக்கிறது.

  • திறன்கள் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்வது எங்கள் இயக்கத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் தொழில்நுட்ப மற்றும் மக்கள் திறன்களை சமமாக வளர்ப்பதைப் பார்க்கிறது. இதற்கு பரந்த அளவிலான திறன்களுக்கான உள்நாட்டில் பொருத்தமான முன்முயற்சிகளுடன் முறையான உலகளாவிய அணுகுமுறை தேவைப்படுகிறது. அணுகுமுறைகள் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப்படும் மற்றும் இவற்றில் ஆன்லைன் கற்றல், பியர் நெட்வொர்க்குகள், பல மொழிகளில் உள்ளடக்கத்தை உருவாக்குதல், வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அங்கீகாரம் மற்றும் சலுகைகள் ஆகியவை அடங்கும். இந்த பரிந்துரை தனிநபர்களுக்கான ஒருங்கிணைந்த தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தையும் அறிவு பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கு தேவையான உள்கட்டமைப்புகளையும் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) முன்மொழிகிறது.

  • இயக்கத்தின் உள்-அறிவை நிர்வகிக்கவும் என்பது இயக்கத்தின் உள்-அறிவு பயனர்களுக்கு சாதகமான, பங்கேற்றல் ரீதியாகவும் மற்றும் உயர் தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரையின் அடிப்படையில், நமக்கு ஆவணமாக்கல் கலாச்சாரம், கற்றல் சொத்துக்களை அணுகுவதற்கான அறிவுத் தளம் மற்றும் இந்த பாத்திரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களின் ஆதரவு தேவை.

  • தன்னார்வலர்களின் சுயாட்சியை மதித்து, தாக்கத்திற்கான அம்சங்களை அடையாளம் காண்பது என்பது நம் உள்ளடக்கம் எவ்வாறு மக்களை பாதிக்கிறது மற்றும் உள்ளடக்கத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை வழங்குகிறது. நம் திட்டங்களில் தவறான தகவல்களில் உள்ள குறிப்பிடத்தக்க தீங்கைப் புரிந்துகொள்வது, உள்ளடக்கத்தை உருவாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஆதரித்தல் மற்றும் முன்னுரிமை அளித்தல் மற்றும் சிறப்பு கூட்டாளர்களுடன் கலந்து பணியாற்றுதல் ஆகியவற்றை நாம் மெலும் சிறப்பாகப் புரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறது.

  • இலவச அறிவில் புதுமையை புகுத்தவும் என்பது நமது திட்டங்களின் வரம்பையும் உள்ளடக்க வடிவங்களையும் ஆராய்ந்து விரிவுபடுத்தும்படியும் மேலும் தொடர்புடையதாக இருக்கவும், மனித அறிவின் தொகையை அணுகலை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது. அறிவு சமத்துவத்திற்கு தடைகளாக இருக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை சமூகங்களுடன் கலந்தாலோசித்து அடையாளம் காண்பது, புதிய திட்டங்களுக்கான பாதைகளை உருவாக்குதல் மற்றும் பல்வேறு வடிவங்கள் மற்றும் நுகர்வு முறைகளில் இலவச அறிவை அணுகுவதற்கான கருவிகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றை இந்த பரிந்துரை முன்மொழிகிறது.

  • இயக்கத்தின் மற்றும் இயக்கத்திற்கான வியூகத்தை திறம்படவும் திறமையாகவும் செயல்படுத்த, நாம் தனிப்பட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த சுய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் நமது பணியை மதிப்பீடு செய்யவேண்டும், பல முறைகள் செய்யவேண்டும் மற்றும் மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். நமது பணியை மதிப்பீடு செய்ய, வளர்ச்சியை தகவல் தெரிவிப்பதற்கு, கற்றலை எளிதாக்குவதற்கு, மற்றும் நம் பணியை மாற்றியமைத்துக்கொள்வதற்கு, வளங்கள், நிபுணத்துவம் மற்றும் திறன், பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பரஸ்பர பொறுப்பேற்றல் ஆகியவை தேவைப்படும்.

பத்து பரிந்துரைகளையும் மற்றும் அவற்றுக்கு பின்னணியில் உள்ள அடிப்படைக் கொள்கைகளையும் செயல்படுத்துவது அடிப்படை கலாச்சார மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு வழிவகுக்கும், இது ‘ஒவ்வொரு தனி மனிதனும் மொத்த அறிவின் கூட்டுத்தொகையிலும் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகம்’ என்ற நமது பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்க நமது இயக்கம் உதவும். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த மாற்றங்களை கூட்டு முயற்சியில் செயல்படுத்துவதன் மூலம், எங்கள் இயக்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் அனைத்து மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற முடியும் மற்றும் நாம் சேவையை வழங்கும் அனைவருக்கும் - இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் - நாம் இலவச அறிவின் சுற்றுச்சூழல் அமைப்பின் அத்தியாவசிய உள்கட்டமைப்பாக மாற முடியும்.