User:Baskar1234
சாதாரண பொதுமக்கள் அரசியல்வாதிகளால் அடிமைகள்போல நடத்தப்படுகிறார்கள், அவர்கள் அடிமைகள் அல்ல ஜனநாயக நாட்டில் குடிமக்களே எஜமான்கள், ஆனால் இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் மக்களின் எஜமானர்கள்போல நலந்துகொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், அதிகாரம் மக்களிடத்தில் இருக்க வேண்டும், மக்களின் நிறைகுறைகளை அரசிடம் முறையிட்டு அதை பெற்று தரும் பாலமாக மட்டுமே அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இத்தகைய நல்ல எண்ணங்களை கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சாக்கடை என்று எந்த இளைஞனும் நினைக்க கூடாது. நம்மை ஆள்பவர்கள் எப்படி சாக்கடைகளாக இருக்க முடியும்? அவர்கள் இருக்கும் இடம் எப்படி சாக்கடையாக முடியும்? அரசியல் சாக்கடை என்று சொல்லி நல்ல இளைஞர்களை அரசியலுக்குள் வர விடாமல் செய்ய சில விஷ கிருமிகள் பறப்பும் பொய்யான கருத்துக்கள்தான் அவை.
இளைஞர்களே ஒன்று சேருங்கள், மாற்றத்தை நம்மால்தான் ஏற்படுத்த முடியும். ஜாதி, மத உணர்வுகளை தூண்டி மக்களின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம்.
மக்களுக்கு அதிகாரத்தை அளிக்கும் உன்னத ஆட்சியை மக்களுக்கு அளிப்போம்.
விழித்தெழு, ஒன்றுபடு, உருவாக்கு கொள்கைகள்:- ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையான நல்ல சமுதாயத்தை உருவாக்குதல். சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு அரசிடம் இருந்து முறையாக் கிடைக்க வேண்டிய சலுகைகளை எந்த ஒரு இடையூரும் இல்லாமல் சென்றடைய வழிவகை செய்தல். நாட்டின் சிறுபான்மையினர் எந்த சூழ்னிலையிலும் பெறும்பான்மை மக்களால் துண்பபடுத்தப்படவோ, அவர்களின் வழிபாடு மற்றும் மத சடங்குகளை தடுக்கும் விதத்தில் நடக்கா வண்ணம் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை போன்ற நல்ல எண்ணங்களை விதைக்க வழிவகை செய்தல். நாட்டுப்பற்று மற்றும் இறைப்பற்று என்பது நமது தாரக மந்திரம். விவசாயத்தை காத்தல், விவசாயத்தை முன்னேற்றுவது, விவசாயம் சார்ந்த படிப்புகளை ஆதரித்தல். புகை, மது போன்றவற்றை கட்டுபடுத்த தேவையான விழிப்புணர்வு, விதிகள் போன்றவை கடுமையாக்கப்பட்டு. படிப்படியாக ஒழிக்கப்பட வழி வகை செய்தல். கல்வியின் தரம் மற்றும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த பட வேண்டும். பல புதிய அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டு. அறியாமை என்ற இருள் நீங்க அனைவருக்கும் அடிப்படை சட்டம், அரசியல் உரிமை, விவசாயம் போன்றவை துவக்கப்பள்ளி முதல் பயில்விக்க வழி வகை செய்தல். தேசிய நதிநீர் இணைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தமிழர் சார்ந்த பிரச்சனைகள் மீனவர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, இலங்கை தமிழர் ஆதரவு போன்றவை மத்திய அரசோடு இணைந்து சுமூக தீர்வு எட்டப்பட பாடுபடுதல். பொது மக்களுக்கு இடையூறாக போராட்டம், கடை அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போன்ற மக்களை அவதிக்குள்ளாக்கும் போராட்டங்களை ஆதரிக்காமல். விழிப்புணர்வு பேரணி, இடையூறு இல்லாமல் கூட்டம் போன்றவற்றை தகுந்த அனுமதி பெற்று நடத்த ஏற்பாடு செய்தல். சிறுசிறு கைத்தொழில் பயிற்சி நிலையத்தை அமைத்து வறுமையில் வாடும் சகோதர சகோதரிகளுக்கு சுய வேலைவாய்ப்புக்கு வழி செய்தல். சுகாதார வளர்ச்சி, சமூகப்பணி, சமூகக்கல்வி மற்றும் சுகாதார கல்வி ஆகியவற்றை அனைவருக்கும் புகட்டுதல். பொது மற்றும் தனியார் நிலங்களில் மரம் வளர்க்க பொதுமக்களுக்களை ஊக்குவித்தல்.. நூலகங்கள் பல ஏற்படுத்தி படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பொது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள உதவி செய்தல். ஊனமுற்றவர்களுக்கு உதவி மற்றும் அரசின் சலுகைகளை முறையாக சென்றடைய ஆவனம் செய்தல். அரசுத் துறைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து அரசுத் திட்டங்களை கிராமப்புறங்களில் செயல்படுத்த உதவி செய்து, திட்டங்களின் பலன்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்ச்சியோடு இளைஞர்களையும் பொது மக்களையும் செயல்பட வைத்தல்.