Jump to content

Talk:Tamil Wikimedians/Wikimania 2022 Meetup

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki
Latest comment: 1 year ago by TVA ARUN in topic பின்னூட்டம்

முதல் உரையாடல்[edit]

உலகளவில் நிகழும் விக்கிமேனியாவினையொட்டி உள்ளூர் சந்திப்பு நடத்திக் கொள்ள விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. உள்ளூர் மட்டுமல்லாமல் நிர்ணயக்கப்பட்ட நிதியில் வெளி மாவட்டப் பயனர்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் மற்றும் இதர திட்டப் பயனர்களுக்கு நிதி நல்கை வழங்கலாம். நிகழ்வு மதுரையில் ஆகஸ்ட் 14 அன்று நடத்தலாம். பெருந்தொற்றுப் பரவல் அதிகரிக்காத சூழலில் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட செலவுகளில் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைகளை முன்வைக்கலாம். நிகழ்ச்சி நடத்துவதற்கு மூன்று கூட்டரங்கங்களை விசாரித்துள்ளோம். அதிகக் கட்டுரைகளைக் கடந்த பயனர்களுக்குப் பாராட்டு செய்தல், விக்கித் திட்டங்களின் கடந்து வந்த பாதை, விருப்பமுள்ள பயனர்களின் இதர அமர்வுகள் என்று திட்டமிடலாம். கல்விப்புலம் அல்லது தமிழ்த்துறை சார்ந்த உள்ளூர் ஆளுமையைக் கொண்டாட்ட நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம். உள்ளூரில் உள்ள ஆர்வமுள்ளவர்களை முன்பதிவு செய்து கொண்டு கலந்துகொள்ள அனுமதிக்கலாம். ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். - ஏற்பாட்டுக் குழு சார்பாக Neechalkaran (talk) 18:29, 4 July 2022 (UTC)Reply


👍Like --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 09.00, 5 சூலை 2022 (UTC)
👍Like --மகாலிங்கம் நா. ரெ.
விக்கிமூலத்தில் இருந்து பிற தமிழ் விக்கித்திட்டங்களுக்கு தரவுகளை மாற்றுதல் குறித்து நண்பர்களுக்கு எடுத்துரைக்க விருப்பம் Info-farmer (talk) 11:12, 9 July 2022 (UTC)Reply

விரிவான உரையாடலுக்கு இன்று மாலை ஏழுமணிக்கு meet.google.com/hiu-ygsn-stt இணைய அழைக்கிறோம். -Neechalkaran (talk) 05:19, 10 July 2022 (UTC)Reply

 • பொதுவாக ஞாயிறு பிற்பகல் முதல் இரவு 9-10 வரை, நான் பேருந்து பயணத்தில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. எடுக்கும் முக்கிய முடிவுகளை இங்கு அறிவிக்கும் பொழுது அறிந்து கொள்கிறேன் Info-farmer (talk) 11:56, 11 July 2022 (UTC)Reply

ஏற்பாட்டுக் குழு[edit]

உறுப்பினராக பதிவு செய்யும் பயனர்கள்:

 1. நிகழ்ச்சி அரங்கம், தங்கும் இடம் ஏற்பாடு, வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு பயண ஆலோசனைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்தலில் ஈடுபட இயலும்.--TNSE Mahalingam VNR (talk) 16:08, 11 July 2022 (UTC)Reply
 2. சந்திப்பு நடப்பதற்கு முதல் நாள் வரை இணையவழி, தொலைபேசி வழியே ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலும்.மா. செல்வசிவகுருநாதன் (talk) 13:51, 11 July 2022 (UTC)Reply
 3. பயண ஆலோசனைகள், நிகழ்வு தொடர்பான பரப்புரை, நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் போன்ற பணிகளைச் செய்ய இயலும்.--Sridhar G (talk) 09:53, 13 July 2022 (UTC)Reply

சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்[edit]

முதற்கட்ட பட்டியல்:

 1. நா. ரெ. மகாலிங்கம்
 2. கி. மூர்த்தி
 3. கு. அருளரசன்
 4. மா. செல்வசிவகுருநாதன்
 5. இரா. பாலா
 6. ஞா. ஸ்ரீதர்
 7. பி. மாரியப்பன் (சத்திரத்தான்)
 8. அ. ஹிபாயத்துல்லா
 9. தகவலுழவன்
 10. அருண்குமார் (TVA ARUN)
 11. அருணன் கபிலன்
 12. தியாகு கணேஷ்
 13. Deepa arul
 14. தேனி மு. சுப்பிரமணி
 15. பாஹிம் - இந்தோனேசியாவிலிருந்து வர விமானப் பயணச்சீட்டு கிடைக்குமா?
 16. --Neyakkoo (talk) 04:05, 21 July 2022 (UTC)Reply
 17. --NithyaSathiyaraj (talk) 04:39, 21 July 2022 (UTC)Reply
 18. --Mythily Balakrishnan (talk) 07:26, 21 July 2022 (UTC)Reply
 19. பாலசுப்ரமணியன்
 20. பா.ஜம்புலிங்கம்
 21. அ.எழிலரசி
 22. சா. அருணாசலம்
 23. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

இது விருப்பப் பட்டியல் தான். நிகழ்விற்குப் பதிவு செய்ய Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup#Registration இங்கே உள்ள படிவத்தில் பதிவு செய்யலாம். -Neechalkaran (talk) 06:13, 22 July 2022 (UTC)Reply


இணைய வழியாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்

 1. தினேஷ்குமார்
 2. குறிஞ்சி
 3. உலோ. செந்தமிழ்க்கோதை

நிகழ்ச்சி நடத்துவதற்கான கூட்டரங்கம்[edit]

தற்போதைய நிலவரம்[edit]

 • தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கம், காமராசர் சாலை, மதுரை
 • ஓட்டல் தமிழ்நாடு, மதுரை
 • பில்லர் மையம், கரடிப்பட்டி, மதுரை

ஆகியவை பரிசீலனையில் உள்ளன. வேறு ஏதேனும் இடங்கள் வசதியாக இருக்கும் என்று கருதினாலும் பதிவிடலாம்.--TNSE Mahalingam VNR (talk) 16:47, 11 July 2022 (UTC)Reply

 • சக்ரா ரெசிடெண்சி, அண்ணாநகர் நகரின் மையத்தில் இருப்பதாலும் முதல் கட்ட தேவைகள் பொருந்துவதாலும் இதையும் கணக்கில் கொள்கிறோம். -Neechalkaran (talk) 18:49, 13 July 2022 (UTC)Reply
  மதுரை கோச்சடையிலுள்ள ஓட்டல் எரிட்டேச்சையும் கருத்தில் கொள்ளலாம். எவ்வளவு செலவாகுமெனத் தெரியவில்லை. திண்டுக்கல் சாலையில் பரவை அருகே மேலும் சில அரங்குகளைக் கேள்விப்பட்டுள்ளேன். நகர்மையத்திலிருந்து சற்று தொலைவு என்பது சிறு குறை. -- Sundar (talk) 03:34, 16 July 2022 (UTC)Reply

தொகுப்பு[edit]

எண் கூட்டரங்கம் தங்கும் வசதி இணைந்து உள்ளது உணவு வசதி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் (கிலோமீட்டர்) மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (கிலோமீட்டர்)
1 தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கம், காமராசர் சாலை, மதுரை இல்லை இல்லை 4.5 3.4
2 ஓட்டல் தமிழ்நாடு, பெரியார் பேருந்து நிலையம் அருகில், மதுரை 625 001 ஆம் ஆம் 3.4 3.8
3 பில்லர் மையம், கரடிப்பட்டி, மதுரை ஆம் ஆம் 16.5 10.6
4 சக்ரா ரெசிடெண்சி, அண்ணாநகர் ஆம் ஆம் 3.7 5.6

நிகழ்ச்சிக்காக இறுதி செய்யப்பட்டுள்ள இடம்[edit]

மதுரை, அண்ணா நகர், வண்டியூர் சாலை, சக்ரா ரெசிடென்சி என்ற அரங்கம் நிகழ்வு நடக்க உள்ள கூட்ட அரங்கமாகவும், முதல் நாளே வரும் விக்கிப்பீடியர்கள் தங்குதற்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.--TNSE Mahalingam VNR (talk) 12:38, 7 August 2022 (UTC)Reply

சிறப்பு விருந்தினர்[edit]

 • தொல்லியல் அறிஞர் முனைவர் சொ. சாந்தலிங்கம் இந்நிகழ்வின் பிற்பகலில் சிறப்பு விருந்தினராக நேரடியாகப் பங்கேற்க இசைந்துள்ளார்.
 • விக்கிமீடியா அறக்கட்டளையிலிருந்து விபின் நிகழ்வு நாளான 14.08.2022 அன்று நம்மோடு இணைகிறார்.
 • தமிழக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வாய்ப்பிருந்தால் நிகழ்வு நாளன்று மாலை இணைய வழியில் நம்மோடு இணைவதாகத் தெரிவித்துள்ளார். --TNSE Mahalingam VNR (talk) 12:39, 7 August 2022 (UTC)Reply

தங்குமிடம்[edit]

முதற்கட்ட கருத்துகள்:

 1. சந்திப்பில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து வருபவர்கள், முதல்நாளோ அல்லது அன்றைய நாள் காலையோ வருவர். இதனைக் கருத்திற் கொண்டு தங்கும் அறைகள் திட்டமிடப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (talk) 14:27, 11 July 2022 (UTC)Reply
 2. தங்குமிடம், கூட்ட அமர்வு இரண்டும் ஒரே இடமாக இருந்தால் நலம். மதுரை, நாகமலை புதுக்கோட்டை அருகே கரடிப்பட்டியில் உள்ள பில்லர் மையம் எனது தெரிவு. இது தவிர காமராசர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக மையம், தமிழ்நாடு ஹோட்டல் ஆகியவையும் பரிசீலனையில் உள்ளன.--TNSE Mahalingam VNR (talk) 15:52, 11 July 2022 (UTC)Reply
 3. பெரும்பான்மையான பயனர்கள் பேருந்துவழிப் பயணம் மேற்கொள்வர் என்பதால் மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருத்தல் நலம்.தங்குமிடத்திற்கு அதிக செலவு செய்வதனை விட அதனை நிகழ்வு தொடர்பான மற்ற விசயத்திற்குப் பயன்படுத்தலாம். எனவே அதீத செலவு வைக்கும் இடம் வேண்டாம். --Sridhar G (talk) 10:01, 13 July 2022 (UTC)Reply

அமர்வுகள்[edit]

பரிந்துரைக்கப்படும் அமர்வுகள்[edit]

 1. அனுபவப் பகிர்வுகள் - விக்கிப்பீடியாவில் கற்றதும் பெற்றதும் - கலந்துரையாடல் (45 நிமிடங்கள்) --TNSE Mahalingam VNR (talk) 15:49, 11 July 2022 (UTC)Reply
 2. பரப்புரைப் பணிகள் - முன்னெடுக்க வேண்டியவையும், தவிர்க்க வேண்டியவையும் (30 நிமிடங்கள்) --TNSE Mahalingam VNR (talk) 15:49, 11 July 2022 (UTC)Reply
 3. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் துப்புரவுப் பணிகளின் முக்கியத்துவம். (30 நிமிடங்கள்) --மா. செல்வசிவகுருநாதன் (talk) 14:20, 11 July 2022 (UTC)Reply
 4. குறிப்பிடத்தக்க அளவு தொடர் பங்களிப்புகள் செய்த பயனர்களை அங்கீகரித்து கெளரவித்தல்.--TNSE Mahalingam VNR (talk) 16:11, 11 July 2022 (UTC)Reply
 5. தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பரப்புரை செய்பவர்களுக்கான நெறிமுறைகள் - கலந்துரையாடல்.(30 நிமிடங்கள்)--BALA. RTalk 15:59, 12 July 2022 (UTC)Reply
 6. பள்ளிகளில் விக்கித் திட்டங்கள். (15 முதல் 30 நிமிடங்கள்) --Sridhar G (talk) 10:05, 13 July 2022 (UTC)Reply
 7. பயிற்சி / பரப்புரைகளுக்குப் பின்னர் தொடர்பங்களிப்பு செய்யாமைக்கான காரணங்கள்-கலந்துரையாடல் (30 நிமிடங்கள்) --Sridhar G (talk) 10:05, 13 July 2022 (UTC)Reply
 8. கடைசியாக நிர்வாக அணுக்கம் பெற்றவர்களுக்கு வாய்ப்பிருந்தால் மூத்த நிர்வாகிகள் பயிற்சி அளித்தல் நலம்.--Arularasan. G (talk) 09:17, 14 July 2022 (UTC)Reply
 9. இன்னும் நேரமிருந்தால் காப்புரிமை விலக்குபெற்ற படங்களைப் பெறுவதும் பதிவேற்றுவதும் என்பதுபற்றி ஒரு அமர்வை நடத்தலாம். -- Sundar (talk) 03:36, 16 July 2022 (UTC)Reply

தொகுப்பு[edit]

எண் பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அமர்வின் வடிவம் காலம் (நிமிடங்கள்) பொறுப்பு பரிந்துரைத்தவர்
1 அனுபவப் பகிர்வுகள் - விக்கிப்பீடியாவில் கற்றதும் பெற்றதும் கலந்துரையாடல் 45 நா. ரெ. மகாலிங்கம்
2 பரப்புரைப் பணிகள் - முன்னெடுக்க வேண்டியவையும், தவிர்க்க வேண்டியவையும் உரையாற்றுதல் 30 நா. ரெ. மகாலிங்கம்
3 தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பரப்புரை செய்பவர்களுக்கான நெறிமுறைகள் கலந்துரையாடல் 30 இரா. பாலா
4 தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் துப்புரவுப் பணிகளின் முக்கியத்துவம் உரையாற்றுதல் 30 மா. செல்வசிவகுருநாதன்
5 குறிப்பிடத்தக்க அளவு தொடர் பங்களிப்புகள் செய்த பயனர்களை அங்கீகரித்து கெளரவித்தல் பரிசளிப்பு 30 நா. ரெ. மகாலிங்கம்
6 பள்ளிகளில் விக்கித் திட்டங்கள் உரையாற்றுதல் 15-30 ஞா. ஸ்ரீதர்
7 பயிற்சி / பரப்புரைகளுக்குப் பின்னர் தொடர்பங்களிப்பு செய்யாமைக்கான காரணங்கள் கலந்துரையாடல் 30 ஞா. ஸ்ரீதர்
8 நிர்வாக அணுக்கம் பெற்றவர்களுக்கு மூத்த நிர்வாகிகள் பயிற்சி அளித்தல் உரையாற்றுதல் 30 கு. அருளரசன்


உள்ளூர் ஆளுமை[edit]

முதற்கட்ட பரிந்துரைகள்:

கி.மூர்த்தி[edit]

 1. தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராசன், சு. வெங்கடேசன் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவர் அல்லது இருவர்
 2. வாழ்த்துரை மற்றும் பரிசளிப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர்--கி.மூர்த்தி (talk) 01:07, 12 July 2022 (UTC)Reply

மா. செல்வசிவகுருநாதன்[edit]

அரசியல் தளத்தில் இயங்காத கல்விப்புலம் அல்லது தமிழ்த்துறை சார்ந்த ஆளுமைகளை கண்டறிந்து அழைக்கலாம் --மா. செல்வசிவகுருநாதன் (talk) 08:10, 12 July 2022 (UTC)Reply

👍Like ----சத்திரத்தான் (talk) 11:55, 13 July 2022 (UTC)Reply
Template:விருப்பம் -- Sundar (talk) 03:37, 16 July 2022 (UTC)Reply
Template:விருப்பம் -- kurinji (kurinji)

நா. ரெ. மகாலிங்கம்[edit]

அ. முத்துக்கிருஷ்ணன் எழுத்தாளர் (தூங்கா நகர நினைவுகள், மலத்தில் தோய்ந்த மானுடம் போன்ற நுால்களை எழதியவர்)--TNSE Mahalingam VNR (talk) 15:41, 12 July 2022 (UTC)Reply

இரா. பாலா[edit]

அரசியல் மற்றும் இயகங்கள் சாந்த ஆளுமைகளைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை வல்லுனர்களையோ ( முனைவர். சத்யமூர்த்தி, முனைவர். ரகுதேவன், முனைவர். சங்கரேஸ்வரி) அல்லது கீழடி ஆய்வு மைய இயக்குனரையோ அழைக்கலாம். எந்தச் சூழலிலும் தமிழ் விக்கியை அரசியலுடன் கலப்பதைத் தவிர்க்கவும்.--BALA. RTalk 15:55, 12 July 2022 (UTC)Reply

தேனி மு. சுப்பிரமணி[edit]

 • தமிழ்த்துறைப் பேராசிரியர்களாக மட்டுமின்றி, விக்கிப்பீடியா குறித்து முழுமையாக அறிந்தவர்களாக இருப்பதும் அவசியம். --Theni.M.Subramani (talk) 02:23, 15 July 2022 (UTC)Reply
  • தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் தமிழ்ச் சங்கங்கள் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அழைக்க முயற்சிக்கலாம். --Theni.M.Subramani (talk) 02:50, 19 July 2022 (UTC)Reply
   • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருக்கும் முனைவர் ந. அருள் அவர்களையும் அழைக்கலாம். முனைவர் ந. அருள் தமிழ் விக்கிப்பீடியா பயனர் என்பதுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடத்தப்பெற்ற செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாட்டிற்காக நடத்தப் பெற்ற விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.--Theni.M.Subramani (talk) 02:55, 19 July 2022 (UTC)Reply

ஞா. ஸ்ரீதர்[edit]

வாய்ப்பிருந்தால் உதயச்சந்திரன் அவர்களை காணொளி வாயிலாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.--Sridhar G (talk) 10:12, 13 July 2022 (UTC)Reply

யூசுப்தீன்[edit]

எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளூர் ஆளுமை. சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்களை அழைக்கலாம். அப்படி அழைக்கும் போது நமது விக்கி பணிகளுக்கு வெகுஜனங்களின் பார்வையை அதிகம் குவியும்..--Yousufdeen (talk) 07:53, 14 July 2022 (UTC)Reply

கு. அருளரசன்[edit]

அரசியல், அதிகாரவர்க ஆளுமைகளை தவிர்த்து தமிழ் வல்லுனர்களையோ, பிற ஆளுமைகளையோ அழைக்கலாம்--Arularasan. G (talk) 09:17, 14 July 2022 (UTC)Reply

குறிஞ்சி[edit]

அரசியல் சார்பற்ற விருந்தினர்களை கலந்துரையாடலுக்கு அழைக்கலாம்.

நினைவுப் பரிசு[edit]

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வகையான நினைவுப் பரிசு வழங்கலாம்? பரிந்துரைகளை இங்கு இடுங்கள்:

 1. மதுரையை நினைவுபடுத்தும் ஒரு பொருள் --மா. செல்வசிவகுருநாதன் (talk) 17:03, 15 July 2022 (UTC)Reply
 1. தமிழ் விக்கிப்பீடியா இலச்சினையிடப்பட்ட பொருட்கள். எழுதுபொருள், டீ-சர்ட்டுகள், தண்ணீர் குடுவைகள், ஸ்டிக்கர்கள் போன்றவை வழங்கலாம். --Dineshkumar Ponnusamy (talk) 22:41, 15 July 2022 (UTC)Reply
  வழிமொழிகிறேன். -- Sundar (talk) 03:38, 16 July 2022 (UTC)Reply

சந்திப்பு நேரம்[edit]

சந்திப்பின் அலுவல்முறை நேர அளவு குறித்த பரிந்துரையை இங்கு இடுங்கள்:

 1. காலை 9 - மாலை 5 மணி வரை --மா. செல்வசிவகுருநாதன் (talk) 09:35, 16 July 2022 (UTC)Reply
👍Like--சத்திரத்தான் (talk) 15:52, 16 July 2022 (UTC)Reply

logo Samples[edit]

Wikimania Madurai logo1
Wikimania Madurai logo2

பயனர்:Jagadeeswarann99 உதவியுடன் இரு வடிவங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் ஒரு வடிவினை உருவாக்க முயல்கிறார். நிகழ்ச்சிக்கென ஒரு லட்சினையைத் தேர்வு செய்ய இவை உதவலாம். உங்களது பரிந்துரைகளையும் முன்வைக்கலாம். ஆர்வமுள்ளவர்களும் லட்சினை உருவாக்கி உதவலாம். -Neechalkaran (talk) 04:53, 27 July 2022 (UTC)Reply

விக்கிமேனியா மதுரை இலச்சினை 1 சிறப்பாக உள்ளது. இதையே முடிவு செய்யலாம்.--TNSE Mahalingam VNR (talk) 15:15, 29 July 2022 (UTC)Reply

விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்யும் சிறுமியை அழைத்து வரலாமா?[edit]

தமிழ் விக்கிமேனியா ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கீழ்கண்ட நிகழ்படப்பதிவில் பங்களிப்பு செய்யும் பள்ளிக் குழந்தையை அழைத்து வரலாமா? அவர்கள் பெற்றோரும் விக்கி மூலம் பங்காளிப்பாளர். அவர்கள் வர இயலாததால், விக்கி மூலத்தில் பங்களிப்புச் செய்யும் அவர்களது ஏழாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை என்னுடன் அனுப்ப விரும்புகின்றனர. அவர்களுக்கு புரிய வைக்க கூடுதல் காலம் தேவைப்பட்டது. அதனால் தான் இப்பொழுது கேட்கிறேன். https://commons.wikimedia.org/wiki/File:Wikisource-Tamil_user_Rabiyathul_Jesniya-TamilNadu_govt_school_girl_2022-.webm (95 நொடிகள் ஓடும்) அப்பள்ளிக் குழந்தைக்கும் நிதியுதவி கிடைக்குமா? விக்கி மூல பங்களிப்பாளர்களான யோசுவா, சாலோம் நான் மூவரும் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்களுடன் சிறுமியையும் தங்க வைத்துக் கொள்கிறோம். ஏழாம் வகுப்பு மாணவி என்பதால் முமழுபயணச்சீட்டு வாங்க வேண்டும். நாங்கள் சென்னையிலிருந்து வர எண்ணி உள்ளோம். அச்சிறுமிக்கு கலந்து கொள்ள நிதி உதவி கிடைக்குமா? உங்களின் எண்ணம் அறிய விரும்புகிறேன் Info-farmer (talk) 13:57, 5 August 2022 (UTC)Reply

வணக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தோம். ஆகஸ்ட் ஒன்றிற்கு முன்னரே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் பயணநிதிநல்கை கிடைத்திருக்கும். இப்போதைய சூழலில் மற்ற ஒருங்கிணைப்பாளர்களுடன் உரையாடினேன் அதன் முடிவுகள் பின்வருவன. தற்போது நிதிநல்கையின் அளவு வரையறைக்கு மீறியுள்ளதால் புதியதாக ஒருவருக்கு வழங்க இயலவில்லை. மேலும் பெண் குழந்தையைக் குடும்பத்தினர் அல்லாதவர்களுடன் தங்க வைப்பதை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கவில்லை. ஆனால் உங்களது செலவில் திட்டமிட்டுக் கொண்டு, நிகழ்வு நாளன்று கலந்து கொள்ள விரும்பினால் தாராளமாக விக்கிமேனியா கொண்டாட்டத்தில் இணையலாம். -Neechalkaran (talk) 01:34, 6 August 2022 (UTC)Reply
எனது செலவு என்றால் நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? Info-farmer (talk) 02:05, 6 August 2022 (UTC)Reply
கடைசி வாரத்தில் முயன்றதால் நிகழ்வு நடக்கும் விடுதி முழுவதும் முன்பதிவு ஆகிவிட்டதாகத் தெரிகிறது. முன்னரே முன்பதிவு செய்திருக்கலாம். சரி, அருகே பல தங்குவிடுதிகள் உள்ளன அவற்றில் நீங்களே முன்பதிவு செய்து கொள்ளலாம். -Neechalkaran (talk) 03:41, 6 August 2022 (UTC)Reply
வெளியில் தங்க எண்ணமில்லை. விடுதியாளர் 3வது படுக்கை தர அனுமதித்தால் பிற பெண் பங்களிப்பாளருடன் தங்க வைக்கும் சூழ்நிலை இருப்பின், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் Info-farmer (talk) 04:22, 6 August 2022 (UTC)Reply
வணக்கம்,மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் மட்டும் தங்க அனுமதிக்குமாறு விழா ஏற்பாட்டளர்கள் முடிவு செய்துள்ளோம்.அதுவும் மாணவிகள் எனில் இதில் சமரசம் காட்ட இயலாது.மாணவர்களின் பங்களிப்பு வரும்காலத்தில் இருக்கும் என்பதால் @Neechalkaran மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பாக விதிகளை வகுப்பது நல்லது. இது தொடர்பாக நிகழ்வில் உரையாடலாம். Sridhar G (talk) 12:05, 6 August 2022 (UTC)Reply
விண்ணப்பக்காலம் முடிந்தும் தொடர்ந்து வினாக்களுக்கு விடை தந்தமைக்கு இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு முதலில் நன்றி கூறுகிறேன். இறுதியாக எனது கீழ்க்கண்ட நிறைவுரையை தருகிறேன்.
நீங்கள் பணியாற்றும் பள்ளி குழந்தைகளும் இன்னும் சில
பள்ளிக் குழந்தைகளும் பெண்களும் விக்கிமூலம் பங்களிப்பில் சிறப்பான பங்களிப்புகள் செய்து இந்திய அளவில் தமிழுக்கு மெய்ப்பு காண்பதில் முதல் இடம் பெற்றுத் தந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து நாம் பேண வேண்டும்.விக்கிப்பீடியாவிலும் பெண் பங்களிப்பாளர்களை வளர்க்க நீங்கள் மேற்கூறியபடி நடைமுறைகளை (விதிகள் அல்ல) உருவாக்க நிகழ்வில் கலந்துரையாடலைத் தொடக்கக் கேட்டக் கொள்கிறேன். இதற்கென ஒரு திட்டப்பக்கம் தொடங்குங்கள் பல பெற்றோர்களின் மனநிலையை அங்கு எழுதச் சொல்கிறேன்; பெற்றோர் எடுக்கும் முடிவே இறுதியானது; விக்கியர் அல்ல. அதற்கான வாய்ப்பை இனிவரும் நாட்களில் விண்ணப்பத்தில் உருவாக்கி தருவோம். சில திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் பங்களிப்பாளர்கள் இது குறித்தும் திட்டமிட வேண்டும். Info-farmer (talk) 16:57, 6 August 2022 (UTC)Reply

//அவர்களைத் தொடர்ந்து நாம் பேண வேண்டும்.// //சில திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் பங்களிப்பாளர்கள் இது குறித்தும் திட்டமிட வேண்டும். // நல்லது , தங்களது புரிதலுக்கு நன்றி. Sridhar G (talk) 17:49, 6 August 2022 (UTC)Reply

ஏற்பாடு தொடர்பான உரையாடல்[edit]

நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக இணையவழியில் ஒரு உரையாடலை செவ்வாய் இரவு திட்டமிடுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இணைந்து கொண்டு திட்டமிட உதவலாம். மாலை 7மணி-8 மணி, ஆகஸ்ட் 9 meet.google.com/hiu-ygsn-stt -Neechalkaran (talk) 02:34, 8 August 2022 (UTC)Reply

நிகழ்வுக் குறிப்புகள்[edit]

https://etherpad.wikimedia.org/p/wikimania2022_Tamil_Madurai BALA. RTalk 03:44, 14 August 2022 (UTC)Reply

பின்னூட்டம்[edit]

 • விக்கிமேனியா மதுரை 2022 நிகழ்வு மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. ஏற்பாட்டுக் குழுவினருக்குப் பாராட்டு. வாய்ப்பிற்கு நன்றி!--Neyakkoo (talk) 03:22, 16 August 2022 (UTC)Reply
 • விக்கிமேனியா மதுரை 2022 நிகழ்வு சிறப்பாக நடந்தது. விழாக் குழுவினருக்குப் பாராட்டு.--Arularasan. G (talk) 13:16, 17 August 2022 (UTC)Reply


 • நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நீச்சல்காரன் உள்ளிட்ட அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்...--Theni.M.Subramani (talk) 08:47, 20 August 2022 (UTC)Reply
 • உரிய முறையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு வாழ்த்துகள்.--TVA ARUN (talk) 07:36, 26 August 2022 (UTC)Reply