தொழில்நுட்பம்/தரவு மைய மாற்றம்
Your wiki will be in read-only soon
இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும் • Please help translate to your language
விக்கிமீடியா நிறுவனம், தனது முதல் மற்றும் இரண்டாம் நிலை தரவு மையத்திற்கிடையேயான மாற்றத்தை சோதனை செய்ய உள்ளது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லாம் வேலை செய்கிறது என்பதை உறுதி செய்ய, விக்கிமீடியா தொழில்நுட்ப துறை ஒரு திட்டமிடப்பட்ட சோதனையை செய்ய வேண்டும். இந்த சோதனை, அவர்களால் ஒரு தரவு மையத்திலிருந்து மற்றொன்றிக்கு நம்பகமாக மாற இயலுமா என்பதை காட்டும். இந்த சோதனைக்காக பல அணிகள் தயாராக வேண்டும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத சிக்கல்களை சரி செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும்.
எல்லா போக்குவரத்தும் 26 ஏப்ரல் அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: 14:00 UTC.
நல்வாய்பற்ற விதத்தில், மீடியாவிக்கியில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.
- செவ்வாய், புதன் 26 ஏப்ரல் 2023 நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
- இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
பிற விளைவுகள்:
- பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
- மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
- 90 நிமிடங்களுக்கு கிட்லாப் (GitLab)-ஐ பயன்படுத்த இயலாது.