மனித உரிமைகளுக்காக விக்கி

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page WikiForHumanRights and the translation is 96% complete.
Outdated translations are marked like this.


Header for Wiki for Human Rights 2022 Meta Page: Right to a Healthy Environment GIF
Header for Wiki for Human Rights 2022 Meta Page: Right to a Healthy Environment GIF
#WikiForHumanRights 2023: Right to a healthy environment

மனித உரிமைகளுக்காக விக்கி 2023: ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை

#மனித உரிமைகளுக்காக விக்கியின் திட்டதின் நோக்கம் என்னவென்றால் அனைவருக்கும் நடுநிலையான, உண்மையான, அடிப்படையிலா மற்றும் தற்போதைய தகவல்களை எங்களின் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையின் தகவல்களை அனுகுவதர்காக ஆகும். ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை சட்டபடியான உரிமை என்று ஐக்கிய நாடுகளால் ஒப்புகொள்ளப்பட்டது, அதுமட்டுமின்றி இது மனித உரிமைகளையும், நாம் எதிர்கொள்ளும் மூன்று கிரக நெருக்கடிகளையும் இணைக்கிறது: காலநிலை மாற்றம், மாசுபாடு, மற்றும் பல்லுயிர் இழப்பு. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் சிறப்பித்துக் காட்டியது போல்: நாம் இயற்கையுடன் சமாதானம் உருவாக்க வேண்டும், மேலும் மனித உரிமைகள் தீர்வுகளின் மையமாக இருக்க வேண்டும்

விக்கிபீடியாவின் பங்கு இக்காலகட்டத்தில் இன்றியமையாதது. எங்கும் இருக்கும் அனைவருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்கள் அறியவேண்டும். அனைத்து மக்களும் தாங்கள் குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு மற்றும் அவர்களுக்குத் தேவையான வளங்களை நம்பியிருக்கும் ஆரோக்கியமான இயற்கை அமைப்புகளைப் பற்றிய அறிவை நாம் அதிகரிக்க முடியும். இந்த வருடம் #மனித உரிமைகளுக்காக விக்கியின் திட்டதின் கீழ், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசுபாடு ஆகிய ஐ.நாவால் அடையாளம் காணப்பட்ட மூன்று கிரக நெருக்கடிகள் உட்பட, அவற்றின் சூழலில் உள்ள மிக அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் உள்ளூர் சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அபாயங்களைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், காரணங்களைத் தணித்து, அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது பகிரப்பட்ட திறனில் தகவல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான மனித உரிமையை நிறைவேற்றுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், முடிவெடுப்பதில் பங்கேற்கவும், நீதி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை அணுகவும், மாசு, காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. விக்கிபீடியாவில் உள்ள இத்தலைப்புகளின் செய்திகளை நிறைவு செய்வதன் மூலம், சூற்றுச்சூழல் நெருகடிகளை தீர்வுச்செய்வதற்கு பொதுமக்கள் எடுக்கும் பல்லாயிரகனக்கான முடிவுகளுக்கு உதவுகிறது.

எவ்வாறு போட்டியில் பங்கேற்க்க!

குழுக்களால் நடத்த்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கவும்!

ஒரு செயல்பாட்டை வழிநடத்தவும்!

ஏதேனும் ஐய்யம் உண்டா?

மனித உரிமைகளுக்காக விக்கியின் 2022 பிரச்சார கானொலியை பார்க்கவும்

முக்கிய தலைப்புக்கள்

ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையைப் பற்றி பேசும் போது, ஐ.நா.சபை மூன்று கிரக நெருக்கடிகளை முக்கியமாக குறிப்பிடுகிறது. அவை:

 • சுற்றுச்சூழல் நீதி, காலநிலை நீதி மற்றும் மனித உரிமைகளை மையமாகக் கொண்ட உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச காலநிலை நெருக்கடி மீதான நடவடிக்கை அணுகுமுறைகள்
 • மற்ற மனித உரிமைகள் (அதாவது மாசுபாடு மற்றும் ஆரோக்கியம், தண்ணீருக்கான உரிமை போன்றவை) மீதான நேரடி தாக்கத்தை மையமாகக் கொண்டு, மாசுபாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மனித நல்வாழ்வு
 • பல்லுயிர் மற்றும் மனித உரிமைகள் - மனித நல்வாழ்வு ஒரு பல்லுயிர் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு சார்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வது

ஏப்ரல் 18 அன்று நிகழ்வு தொடங்குகிறது மற்றும் 2023 எழுத்துப் போட்டிகளில் மாசு மற்றும் நச்சுக் கழிவுகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு பிராந்திய பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் உள்ளூர் சூழலுக்கு முக்கியமான அறிவையும் சிக்கல்களையும் அடையாளம் காணும்.


காலவரிசை

 • உலகளாவிய பிரச்சார நடவடிக்கைகள் (எடிட்-ஏ-தோன், மொழிபெயர்ப்பு, எழுதும் போட்டி, புகைப்பட நடைகள் போன்ற உள்ளடக்க இயக்கிகள்; வெபினார்கள்; பட்டறைகள் மற்றும் மாநாடுகள்) - ஏப்ரல்-ஜூன் 2023
 • பிராந்திய அலுவலக நேரம் - ஜனவரி-பிப்ரவரி 2023
 • திறன் மேம்பாட்டு அமர்வுகள் - பிப்ரவரி-மார்ச் 2023
 • வலையிணைப்பு அமர்வுகள் - பிப்ரவரி-ஜூன் 2023
 • சர்வதேச வெளியீட்டு வெபினார் - 18 ஏப்ரல் 2023
 • சர்வதேச எழுத்துப் போட்டி - 15 ஏப்ரல்-15 மே 2023
 • இளைஞர் புரோகிராமிங் - பிப்ரவரி-ஏப்ரல் 2023
 • விரைவான மானிய விண்ணப்பம் - சுழல்ச்சி 7 ஜனவரி-மார்ச் 2023: காலக்கெடு - ஜனவரி 30 மற்றும் சுழல்ச்சி 8 மார்ச்-மே 2023: காலக்கெடு - 20 மார்ச் 2023. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும் .