விக்கிமீடியா அறக்கட்டளை அறங்காவலர் குழு

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikimedia Foundation Board of Trustees/Overview and the translation is 100% complete.

விக்கிமீடியா அறக்கட்டளை
அறங்காவலர் குழு


Idea or report icon (the Noun Project 2384902).svg
Wikimedia Community Logo.svg

விக்கிபீடியாவில் நீங்கள் விரும்பிப் படிக்கும் கட்டுரையை, அதிலிருந்து பெறும் தகவலறிவை உங்களுக்கு இலவசமாக வழங்க ஆயிரக்கணக்கானோர் பின்னணியில் பணியாற்றி வருவது உங்களுக்குத் தெரியுமா?.

உலகம் முழுவதிலுமிருந்து பலர் இந்த அற்புதமான சமூகத்தில் தங்களை இணைந்துகொண்டு விக்கிபீடியா, விக்கிடேட்டா, விக்கிசோர்ஸ் போன்ற சிறந்த திட்டங்களைப் பராமரித்து வருகின்றனர்.

அவர்கள் இப்பணியைச் சிறப்பாக மேற்கொள்ள விக்கிமீடியா அறக்கட்டளை உதவுகிறது. தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, சட்டம் சார்ந்த சவால்கள் மற்றும் அவ்வப்போது எழும் வேறு பல சிக்கல்கள் ஆகியவற்றை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

Wikimedia Foundation logo - vertical.svg

விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு இதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறது. சமூகச் செயல்முறைகள் மூலமாகச் சிலரும், நிர்வாகக் குழு மூலம் நேரடியாகச் சிலரும் இந்த அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அறக்கட்டளைக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:
சமூகம் மற்றும் சார்ந்த அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினர்கள்
நிர்வாகக் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 உறுப்பினர்கள்
1 நிறுவனர் உறுப்பினர்

16 people icon.svg

ஒவ்வொரு அறங்காவலரும் மூன்று ஆண்டு காலத்திற்குச் சேவையாற்றுகிறார்கள்.


Global search icon (the Noun Project 1238421).svg
Voting icon (the Noun Project 2536419).svg

உலகளவில் இருந்து சிறந்த நபர்களை நிர்வாகக் குழுவினர் அடையாளம் கண்டு அறங்காவலர் பணிக்குத் தேர்வு செய்கின்றனர். இப்பணிக்குத் தகுதியுள்ளவர்எனத் தற்போதுள்ள அறங்காவலர் குழுவும், தன்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் எனத் தேர்வு செய்யப்பட்ட நபரும் முழுமையாக ஏற்கும் நிலையில் அவர்கள் வாரியத்தில் இணைகிறார்கள்.

சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய வாக்களிக்கும் வாய்ப்பு விக்கிமீடியா சமூகத்திடம் உள்ளது. நிர்வாகக் குழுவில் இணைந்து செயலாற்ற உகந்த பிரதிநிதித்துவம், பன்முகத்தன்மை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்த சமூகம் கொண்டுள்ள வாய்ப்பு இது.


நிர்வாகக் குழுவில் பணிகளுக்காக ஆண்டுக்கு சுமார் 150 மணிநேரம் செலவிட அறங்காவலர்கள் உறுதி ஏற்கின்றனர். நிர்வாகக் குழுவின் பல்வேறு பணிக்குழுக்களான வாரிய நிர்வாகம், தணிக்கை, மனித வளங்கள், தயாரிப்புகள், சிறப்புத் திட்டங்கள் மற்றும் சமூக விவகாரங்கள் ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றில் அவர்கள் பங்கேற்கின்றனர். Directors icon (the Noun Project 3156284).svg
நிர்வாகக் குழுவின் கூட்ட நடவடிக்கைத் தகவல்கள் ஃபவுண்டேஷன் விக்கியின் 'சந்திப்புகள்' பக்கத்தில் அல்லது அக்குழுக்களின் பக்கங்களில் வெளியிடப்படுகிறது.