Universal Code of Conduct/ta
The ratification voting process for the revised enforcement guidelines of the Universal Code of Conduct (UCoC) has now concluded. Results are posted here. A summary of comments will be posted when available. |
![]() | This page documents an unrevised version of the Universal Code of Conduct approved by the Board of Trustees on December 9, 2020 (see announcement and policy text as ratified), though not approved by the community. This version will not be enforced. Global conversations and proposal drafting on the implementation and application of the UCoC are ongoing. For more information, please see the FAQ. To propose further changes, please visit the the talk page . |
Universal Code of Conduct
![]() | This content mirrors content from the Wikimedia Foundation Governance Wiki for localization purposes. Revisions made as a result of the ratification process are recorded in the change log. |
நம்மிடம் ஒரு UCOC இருப்பதற்கான காரணம்
விக்கிமீடியா திட்டங்கள் மற்றும் இடைவெளிகளில் தீவிரமாக பங்கேற்க, முடிந்தவரை பலரை மேம்படுத்துவதில் நாங்கள் நம்புகிறோம், உலகத்தைப் பற்றிய நமது பார்வையை அடைய, அதில் அனைத்து மனித அறிவின் கூட்டுத்தொகையில் அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியும். எங்கள் பங்களிப்பாளர்களின் சமூகங்கள் முடிந்தவரை மாறுபட்டவை, அனைத்தையும் உள்ளடக்கியவை மற்றும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சமூகங்கள் அவர்களுடன் சேரும் (மற்றும் சேர விரும்பும்) எவருக்கும் நேர்மறையான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த நடத்தை நெறியைத் தழுவி, தேவைக்கேற்ப புதுப்பிப்புகளை மறுபரிசீலனை செய்வதும் உட்பட, அது அப்படியே இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும், உள்ளடக்கத்தை சேதப்படுத்தும் அல்லது சிதைப்பவர்களுக்கு எதிராக எங்கள் திட்டங்களை பாதுகாக்க விரும்புகிறோம்.
இலக்கிற்கு இயைந்தவாறு, Wikimedia செயல்திட்டங்கள் மற்றும் வெளிகளில் ஈடுபடும் அனைவரும்:
- இருக்கும் மொத்த அறிவையும் எல்லோரும் சுதந்திரமாகப் பகிரக்கூடிய ஓர் உலகை உருவாக்க உதவுவார்கள்.
- மனச்சாய்வையும் முன்முடிவையும் தவிர்க்கும் ஓர் உலகளாவிய சமூகத்தில் பங்கேற்பார்கள்.
- அதன் பணிகள் அனைத்திலும் துல்லியம் மற்றும் சரிபார்க்கத்தக்க தன்மையை அடைய உழைப்பார்கள்.
இந்த அனைத்தும் தழுவிய நடத்தை நெறி (Universal Code of Conduct - UCOC), ஏற்கத்தக்க மற்றும் ஏற்கத்தகாத நடத்தையின் தகுதிநிலை ஒன்றை வரையறுக்கிறது. இணையத்தில் உள்ள மற்றும் இணையத்தில் இல்லாத Wikimedia செயல்திட்டங்கள், வெளிகள் ஆகியவற்றுடன் ஊடாடுகின்ற மற்றும் பங்களிக்கின்ற எல்லோருக்கும் இது பொருந்தும். புதிய மற்றும் அனுபவமிக்க பங்களிப்பாளர்கள், செயல்திட்டங்களுக்குள் இருக்கும் அலுவலர்கள், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், இணைநிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், Wikimedia Foundation (விக்கிமீடியா அறக்கட்டளை) ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். இது நேரடி மற்றும் மெய்நிகர் நிகழ்வுகள், தொழில்நுட்ப வெளிகள், மற்றும் அனைத்து Wikimedia செயல்திட்டங்களுக்கும் விக்கிகளுக்கும் பொருந்தும். இதில் பின்வருவனவும் அடங்கும்:
- பொது மற்றும் பகுதியளவு பொது ஊடாடல்கள்
- சமூக உறுப்பினர்களிடையே உடன்படாமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துதல் குறித்த உரையாடல்கள்
- தொழில்நுட்ப உருவாக்கம் சார்ந்த பிரச்சினைகள்
- உள்ளடக்கப் பங்களிப்பின் கூறுகள்
- புறநிலைக் கூட்டாளர்களுடன் இணைநிறுவனங்களை/சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நேர்வுகள்
1 – அறிமுகம்
உலகளாவிய நடத்தை விதிமுறை உலகெங்கிலும் உள்ள விக்கிமீடியா திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்கான ஒரு அடிப்படை நடத்தை வழங்குகிறது. உள்ளூர் மற்றும் கலாச்சார சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கொள்கைகளை உருவாக்க சமூகங்கள் இதைச் சேர்க்கலாம், அதே நேரத்தில் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அளவுகோல்களை குறைந்தபட்ச தரமாக பராமரிக்கின்றன.
UCOC எந்த விதிவிலக்குகளும் இன்றி எல்லா விக்கிமீடியர்களுக்கும் சமமாகப் பொருந்தும். UCOC-க்கு முரணாகச் செயல்பட்டால் அதன் விளைவாக மேடைகளின் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களால் (உள்ளூர் சமூகங்களின் ஏற்பு மற்றும் பின்புலப்படுத்துதலின்படி) அல்லது அந்த மேடைகளின் சட்டபூர்வ உரிமையாளராக Wikimedia Foundation-ஆல் தண்டனைகள் விதிக்கப்படலாம்.
2 – எதிர்பார்க்கப்படும் நடத்தை
ஒவ்வொரு விக்கிமீடியரும், அவர் புதிய அல்லது அனுபவமிக்க தொகுப்பாளர், சமூக அலுவலர், இணையாளர் அல்லது WMF அறங்காவலர் குழு உறுப்பினர் அல்லது ஊழியர் என யாராக இருந்தாலும் தமது சொந்த நடத்தைக்குப் பொறுப்பானவர்.
எல்லா Wikimedia செயல்திட்டங்கள், வெளிகள் மற்றும் நிகழ்வுகளிலும் நடத்தையானது மரியாதை, நாகரிகம், ஒருமைப்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். இது வயது, மன அல்லது உடல் ஊனங்கள், உடல் தோற்றம், தேசிய, மத, இன, பண்பாட்டுப் பின்னணி அல்லது சாதி, வர்க்கம், மொழித் திறன், பாலியல் சார்புநிலை, பாலின அடையாளங்கள், அல்லது தொழில் புலத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் பங்களிப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் எல்லா பங்களிப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களோடும் மேற்கொள்ளும் ஊடாடலுக்குப் பொருந்தும். சாதனைகள், திறமைகள் அல்லது Wikimedia செயல்திட்டங்களிலோ இயக்கத்திலோ உள்ள அந்தஸ்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டவும் மாட்டோம்.
2.1 – மரியாதை
மரியாதை என்பது மற்றவர்களை மதிப்பது. Wikimedia சூழல்களில், இணையத்தில் இருந்தாலும் மெய்யுலகில் இருந்தாலும், மற்றவர்களுடன் தொடர்புறுத்தும்போது, அவர்கள் நம்மை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போமோ அதே மரியாதையுடன் நாம் அவர்களை நடத்துவோம்.
இதில் பின்வருவனவும் அடங்கும்:
- புரிந்துணர்வைப் பழகுங்கள். எந்த விக்கிமீடியரும் உங்களிடம் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் புரிதல், எதிர்பார்ப்புகள், விக்கிமீடியர் என்ற முறையில் உங்கள் நடத்தை ஆகியவை பற்றிக் கேள்வி எழுப்பிச் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள்.ம்.
- மற்றவருக்கு நேர்மையான நோக்கம் இருப்பதாகவே எப்போதும் நினையுங்கள். ஆக்கபூர்வமான, நேர்மறையான தொகுத்தலில் ஈடுபடுங்கள். பரிவோடும் நேர்மையான நோக்கதோடும் பின்னூட்டத்தை வழங்குங்கள், பெறுங்கள். விமர்சனம் நுண்ணுணர்வோடும் ஆக்கபூர்வமாகவும் செய்யப்பட வேண்டும், அதில் மேம்பாட்டுக்கான திட்டவட்டமான, அளவிடத்தக்க வியூகங்கள் அடங்கியிருக்க வேண்டும்.
- பங்களிப்பாளர்கள் தங்கள் பெயரைச் சொல்லி விவரித்துக்கொள்ளும் விதத்தை மதியுங்கள். மக்கள் தங்களை விவரித்துக்கொள்ளக் குறிப்பான சொற்களைப் பயன்படுத்தக்கூடும். மரியாதைக்கு அடையாளமாக, இவர்களுடன் அல்லது இவர்களைப் பற்றித் தொடர்புறுத்தும்போது இந்தச் சொற்களைப் பயன்படுத்துங்கள். சில எடுத்துக்காட்டுகள்:
- இனக் குழுக்கள் தொன்றுதொட்டு மற்றவர்கள் அவர்களை விவரிக்கப் பயன்படுத்திய பெயருக்கு பதிலாகத் தங்களை விவரித்துக்கொள்ளக் குறிப்பாக ஒரு பெயரைப் பயன்படுத்தக்கூடும்
- தனித்துவமான எழுத்துக்கள், ஒலிகள், அல்லது தங்கள் மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் பெயர்களைக் கொண்டவர்கள்
- தனித்துவமான பெயர்களை அல்லது பெயர்ச்சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட ஒரு பாலியல் சார்புநிலையை அல்லது பாலின அடையாளத்தைக் கொண்டவராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்
- குறிப்பாக ஓர் உடல் ரீதியான அல்லது மன ரீதியான ஊனத்தைக் கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளக் குறிப்பாகச் சில சொற்களைப் பயன்படுத்தக்கூடும்
- நேரில் சந்திக்கும்போது, நாம் எல்லோரையும் அன்புடன் நடத்தப் பாடுபடுவோம், மற்றவர்களின் விருப்பங்கள், உணர்வுகள், மரபுகள், தேவைப்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வோம், மதிப்போ
2.2 – நாகரிகம், தோழமை, ஒருமைப்பாடு, நல்லொழுக்கம்
பின்வரும் நடத்தைக்கு நாங்கள் பாடுபடுகிறோம்:
- நாகரிகம் என்பது அறிமுகமற்றவர்கள் உட்பட மக்களிடையே நடத்தையிலும் பேச்சிலும் காட்டும் உயர்ந்த நிலையிலான நாசூக்கு.
- தோழமை என்பது பொதுவான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் நட்பார்ந்த ஆதரவாகும்.
- நல்லொழுக்கம் என்பது Wikimedia செயல்திட்டங்கள் ஆக்கவளமுடைய, இனிய, பாதுகாப்பான இடங்களாக இருப்பதையும் Wikimedia Mission-க்கு (விக்கிமீடியா இலக்கு) பங்களிப்பதையும் உறுதிப்படுத்தச் செயலூக்கத்துடன் பொறுப்பெடுத்துக்கொள்ளுதல்.
இதில் பின்வருவனவும் அடங்கும்:
- வழிகாட்டல் மற்றும் பயிற்சியளித்தல்: புதியவர்கள் தங்கள் பாதையை அறியவும் இன்றியமையாத திறன்களை வளர்த்துக்கொள்ளவுமான வழிகாட்டல்
- ஒருமைப்பாடு காட்டுங்கள். சக பங்களிப்பாளர்களை கவனித்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது கைகொடுங்கள், அவர்கள் நமது தரநிலைகளை எட்டாத வகையில்
- பங்களிப்பாளர்கள் செய்த பணியை அடையாளம் கண்டு அங்கீகரியுங்கள்: அவர்கள் உங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கூறுங்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு நன்றி தெரிவியுங்கள், முறையாக அங்கீகாரம் அளியுங்கள்.
3 – ஏற்கத்தகாத நடத்தை
அனைத்தும் தழுவிய நடத்தை நெறியானது கெட்ட நடத்தை மற்றும் துன்புறுத்தல் நிகழும் சூழ்நிலைகளைச் சமூக உறுப்பினர்கள் அடையாளம் காண உதவுவதை இலக்காகக் கொண்டது. பின்வரும் நடத்தைகள் Wikimedia இயக்கத்திற்குள் ஏற்கத்தகாதவையாகக் கருதப்படுகின்றன:
3.1 – துன்புறுத்தல்
இதில் ஒரு நபரை அச்சுறுத்துவதை, ஆத்திரமூட்டுவதை அல்லது வேதனைப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட எந்த நடத்தையும் அடங்கும். அந்த நடத்தை சாதாரணமாக ஒரு நபர் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய அளவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் (பண்பாட்டுப் பின்புலத்தையும் சம்பந்தப்பட்ட நபர்களின் எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொண்டு) அது துன்புறுத்தலாகக் கருதப்படலாம். துன்புறுத்தல் பல சமயங்களில் உணர்ச்சி ரீதியாக மோசமாக நடத்துதல் - குறிப்பாக பலவீனமான நிலையில் இருப்பவர்களை - என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது.
- அவமதிப்புகள்: இதில் வசவு, இழிசொற்களை அல்லது முத்திரையிடும் சொற்களைப் பயன்படுத்துதல், மற்றும் தனிப்பட்ட பண்புகளின் அடிப்படையில் செய்யப்படும் எந்தத் தாக்குதல்களும் அடங்கும். அவமதிப்புகள் என்பவை அறிவுத்திறன், தோற்றம், இனப்பிரிவு, இனம், மதம், பண்பாடு, சாதி, பாலியல் சார்புநிலை, பாலினம், ஊனம், வயது, நாட்டினம், அரசியல் சார்பு, அல்லது பிற பண்புகள் போன்ற பார்க்கப்படும் பண்புகளைக் குறிப்பிடக்கூடும். சில நேர்வுகளில், கிண்டல் செய்தல், இளக்காரமாகப் பேசுதல், அல்லது பகைமை வெளிப்படப் பேசுதல் ஆகியவை தனித்தனிக் கூற்றுகள் அவமதிப்புகளாக இல்லாமல்போனாலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது கூட்டாக அவமதிப்புகளாகலாம்.
- பாலியல் துன்புறுத்தல்: மற்றவர்களிடம் எந்த விதமான நாடப்படாத பாலியல் கவனமும் அல்லது முயற்சிகளும்.
- மிரட்டல்கள்: ஒரு வாக்குவாதத்தில் வெல்வதற்காக அல்லது ஒருவரை நீங்கள் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளக் கட்டாயப்படுத்த உடல் ரீதியான வன்முறை, சட்ட ரீதியான நடவடிக்கை, நியாயமற்ற தர்மசங்கடம், அல்லது நற்பெயருக்குக் களங்கம் எனும் சாத்தியக்கூறைப் பயன்படுத்துதல்.
- மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதை ஊக்குவித்தல்: இன்னொருவர் தமது உடலுக்குத் தீங்கு விளைவித்துக்கொள்ள அல்லது தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தல், அத்துடன் ஒரு வெளி நபர் மீது வன்முறையை நிகழ்த்த ஒருவரை ஊக்குவித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
- பகிரங்கமாக்குதல்: மற்றவர்களுடைய பெயர், பணிபுரியும் இடம், முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களுடைய வெளிப்படையான அனுமதி இன்றி வெளியிடுதல். குறைந்தபட்சத் தரநிலையாக, ஒருவர் ரகசியமாக வைத்துக்கொள்ள முயல்கின்ற, இணையத்தில் வெளியிடாத தகவல்களை ஒருபோதும் வெளியிடக் கூடாது. பல சமூகங்களில் இதைவிட உயர்ந்த தரநிலை இருக்கும். அவை இணையத்தில் வேறு இடத்தில் வெளியிடப்பட்ட, ஆனால் ஒரு Wikimedia செயல்திட்டத்தில் பகிரப்படாத தகவல்களை வெளியிடுவதை அனுமதிக்க விரும்புவதில்லை.
- துரத்தல்: ஒரு நபருக்கு வேதனையளிக்க அல்லது நம்பிக்கை இழக்கச்செய்ய செயல்திட்டத்தில் அவரைப் பின்தொடர்ந்து அவரது பணியை மீண்டும் மீண்டும் விமர்சித்தல்.
- இணையத்தில் வம்பு செய்தல்: வேண்டுமென்றே உரையாடல்களில் இடையூறு செய்தல் அல்லது ஒருவரைத் தூண்டி விடுவதற்காகவே கெட்ட நோக்கத்துடன் இடுகைகளை வெளியிடுதல்.
3.2 – அதிகாரம், சிறப்புரிமை, அல்லது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துதல்
அதிகாரம், சிறப்புரிமை, அல்லது செல்வாக்கு இருக்கின்ற அல்லது இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒருவர் மற்றவர்களிடம் அவமரியாதையாக, குரூரமாக, மற்றும்/அல்லது வன்முறையாக நடந்துகொள்ளும்போது தவறான பயன்பாடு நிகழ்கிறது. Wikimedia சூழல்களில், இது மிக அதிக சமயங்களில் உணர்ச்சி ரீதியாக மோசமாக நடத்துதல் (சொல் ரீதியாக, மன ரீதியாக, உளவியல் ரீதியாக தவறாக நடத்துதல்) என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது, இது துன்புறுத்தலுடன் சேர்த்துச் செய்யப்படக்கூடும்.
- அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்துதல்: (தேர்வு செய்யப்பட்ட) செயல்திட்ட அலுவலர்கள் மட்டுமின்றி Wikimedia Foundation-இன் அல்லது Wikimedia-வின் இணைநிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக உள்ள அதிகாரங்கள், அறிவு அல்லது வளங்களை மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக அல்லது மிரட்டுவதற்காக, அல்லது தங்கள் சொந்தப் பொருள்சார் அல்லது பொருள்சாரா நன்மைக்காகத் தவறாகப் பயன்படுத்துதல்.
- பணிமூப்பு மற்றும் தொடர்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல்: பதவியையும் நற்பெயரையும் பயன்படுத்தி மற்றவர்களை அச்சுறுத்துதல். இயக்கத்தில் உள்ள, குறிப்பிடத்தக்க அனுபவமும் தொடர்புகளும் கொண்ட நபர்கள் குறிப்பாகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் விரோதமான கருத்துரைகளால் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை உருவாகும் தவறுதலான விளைவு ஏற்படக்கூடும்.
- சுயசந்தேகம் ஏற்படுத்துதல் (உளவியல் ரீதியாக சூழ்ச்சி செய்து கையாளுதல்): ஒருவர் தமது சொந்தப் பார்வைகளை, புலன்களை, அல்லது புரிதலை சந்தேகப்படவைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் (தனியாக அல்லது ஒரு குழுவுடன்). சமூக அதிகாரம் உள்ளவர்கள் நம்பகமானவர்களாகப் பார்க்கப்படும் குறிப்பான சிறப்புரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடன் உடன்படாத கருத்துக்களைக் கொண்டவர்களை அதைப் பயன்படுத்தித் தவறாக நடத்தக் கூடாது.
3.3 – உள்ளடக்கத்தை சேதப்படுத்துதல் மற்றும் செயல்திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்
வேண்டுமென்றே தவறான அல்லது மனச்சாய்வுள்ள உள்ளடக்கத்தை செயல்திட்டங்களில் புகுத்துதல் அல்லது உள்ளடக்க உருவாக்கத்தில் இடையூறு செய்தல். இதில் பின்வருவனவும் அடங்கும்:
- முறையான இணையர் மீள்பார்வையோ மேம்பாட்டுக்கான ஆக்கபூர்வமான பின்னூட்டமோ இன்றி மீண்டும் மீண்டும் உள்ளடக்கத்தை அகற்றுதல்
- மெய்ம்மைகளின் குறிப்பான விளக்கங்களுக்கு அல்லது பார்வைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்படி உள்ளடக்கத்தைத் திட்டமிட்டுத் தவறாக மாற்றுதல்
- இனம், மதம், தோலின் நிறம், பாலியல் அடையாளம், பாலின அடையாளம், இனப்பிரிவு, ஊனம், அல்லது பிறந்த நாட்டின் அடிப்படையில் ஒரு மக்கள் குழுவினரை அல்லது வர்க்கத்தினரைத் தவறாகச் சித்தரிக்கும், அவமானப்படுத்தும், அல்லது அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் எந்த வெளிப்பாட்டு வடிவத்திலுமான வெறுப்புப் பேச்சு
- மற்றவர்களை அச்சுறுத்தும் அல்லது அவர்களுக்குத் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் காரணமற்ற, நியாயமற்ற விதத்தில் அடையாளங்கள், படிமங்கள், அல்லது உள்ளடக்கத்தைச் சேர்த்தல்.
|